சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்களின் செயல்பாட்டால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குழப்பத்தில் இருப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசர நிலைக்கு எதிராக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தீர்மானம் கொண்டுவந்தபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து முழக்கமிட்டதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் கூச்சலிட்ட அதேசமயம், சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் எந்தவொரு அசைவுமின்றி தங்களது இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும், அவர்களது செயல்பாட்டால் ராகுல் காந்தி குழம்பிப் போனதாகவும் சம்பித் பத்ரா குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்பு சட்ட பிரதியை தூக்கிக் காட்டினால் மட்டும் அதைப் பாதுகாத்துவிட முடியாது என்றும், இதயத்தின் ஆழத்திலிருந்து அரசியல் சட்டத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் சம்பித் பத்ரா வலியுறுத்தினார்.