ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை அடிப்படை உண்மையற்ற மற்றும் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக ஏபிவிபி அமைப்பின் மாநில செயலாளர் யுவராஜ் தாமோதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நுழைவுத்தேர்வு உட்பட அனைத்துவிதமான தேர்வுகளிலும் வினாத்தாள் கசிவுகளை தடுத்து வெளிப்படையாக மதிப்பீடு முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மேலும், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தவேண்டும் எனவும் யுவராஜ் தாமோதரன் வலியுறுத்தினார்.