பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மதச்சார்பற்ற ஜனதா தள முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வால் ரேவண்ணா மீது கர்நாடக மாநிலம் ஹோலே நரசிபுரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் தற்போது விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜாமின் கோரி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வால் ரேவண்ணா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரஜ்வால் ரேவண்ணா மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 376-இன்கீழ் கூடுதலாக வழக்குப் பதிவு செய்திருப்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை நிறைவில் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.