இந்திய தணிக்கை துறை தலைவரின் 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்தப் பணிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்திய தணிக்கை துறை தலைவரின் 2023-ம் ஆண்டுக்கான அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 35 டெண்டர்களை மாதிரியாக தேர்வு செய்து ஆய்வு செய்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே பணிகள் தரப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சேலம் நீர்வளத்துறை வெளியிட்ட 6 டெண்டர்களை, விதிகளை மீறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்ததாரர்கள், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வெளியிட்ட 27 டெண்டர்களில் பங்கேற்றுள்ளதாகவும்,
அதில், 20 டெண்டர்கள் ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை துறையால் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை கூறியதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.