சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, அண்ணா நகர் பகுதியில் காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் அனைவரையும் கவரும் வகையில் உற்சாக நடனம், பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள், கராத்தே உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக அண்ணாநகர் ரவுண்டான சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் 5வது நிழற்சாலையில் இடப்புறம் வழியாக செல்ல வேண்டும் எனவும் ஈ.வே.ரா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் 5 வது நிழற்சாலையில் வலதுபுறமாக திருப்பப்பட்டு போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டது.