கடலூர் மாவட்டத்தில், வருமானத்துறை அதிகாரி என மிரட்டி பணம் பறித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த முதியவரான சந்திரசேகரன் என்பவர், வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி, குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணம் பறித்துள்ளார்.
மேலும், பண்ருட்டி அருகே தனியார் கல்லூரியில் பணிபுரியும் ஊழியரின் மனைவிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் பணி வாங்கித் தருவதாக கூறி போலி பணி ஆணையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த கல்லூரி நிர்வாகிகள், முதியவர் சந்திரசேகரனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.