இந்தியா, அமெரிக்க வர்ததக ஒப்பந்தம் : புதிய சகாப்தத்தை உருவாக்கிய பிரதமர் மோடி - சிறப்பு தொகுப்பு!
Sep 21, 2026, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, அமெரிக்க வர்ததக ஒப்பந்தம் : புதிய சகாப்தத்தை உருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கான 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ததோடு மட்டுமில்லாமல், ஏற்கெனவே இருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் மூலம், வர்த்தகக் கொள்கை, புவிசார் அரசியல் உத்தி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சந்தை மறுசீரமைப்பு என பிரதமர் மோடி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பிறகு, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளார் அதிபர் டிரம்ப். மேலும்,இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும் இந்தியா உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவின் எண்ணெய்யை அதிகளவில் இந்தியா கொள்முதல் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2024-ல் 212.3 பில்லியன் டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம் 2025-ல் 230 பில்லியன் டாலரைத் தாண்டியது. அடுத்த 5 ஆண்டுகளில் இது 500 பில்லியன் டாலராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் பல நாடுகள் அதிகமான அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியாவுக்கு 18 சதவீத வரி என்பது உலகலாவிய சந்தை பொருளாதாரத்தையும் விநியோக சங்கிலியையும் மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிரிட்டனுக்கு 10 சதவீதமும், ஐரோப்பிய யூனியன், சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 15 சதவீதமும், பிரேசிலுக்கு 50 சதவீதமும், தென்னாப்பிரிக்காவுக்கு 30 சதவீதமும், வியட்நாம், பிலிப்பைன்ஸ்,வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு 20 சதவீதமும், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு 19 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

சீனாவுக்கு 40 சதவீத வரியும் fentanyl கடத்தல் சட்டங்களின் கீழ் மேலும் அதிக வரிகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல லாவோஸ் மற்றும் மியான்மருக்கும் 40 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

அவுட்சோர்சிங் செய்வதில் சீனாவை பெரிதும் நம்பியுள்ள நிலையில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் சீனாவின் பிளஸ் ஒன் வியூகத்தின் படி, சீனாவுக்கு மாற்றாக இந்தியாவையே தேர்ந்தெடுக்கின்றன.

இந்தச் சூழலில்,18 சதவீத வரி இந்தியாவுக்கு உலகளாவிய முதலீட்டையும் இந்திய வணிகர்களுக்கு பெரும் லாபத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்று கூறப் படுகிறது.

இந்த வரி குறைப்பால் இந்தியாவின் ஜவுளி, கடல் உணவு, ஆட்டோமொபைல் மற்றும் ரசாயனத் துறைகள் பெருமளவில் பயனடையும் என்று கூறப் படுகிறது

குறிப்பாக லாப வரம்புகள் பெரும்பாலும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இருக்கும். அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் ஜவுளி, ஆயுத்த ஆடை மற்றும் காலணிகள் போன்ற துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் நன்மை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் அத்துறைகளில் இந்தியாவுக்குப் போட்டியாக உள்ள பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் சீனாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் கணிக்கப் படுகிறது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு, நியூசிலாந்து,ஓமன்,பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா, இந்த ஆண்டு,77வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய கையோடு ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக உடன்பாட்டை எட்டியது குறிப்பிடத் தக்கது.

Tags: india us trade agreement collapsebilateral trade agreement india usindia us trade agreement latest updatetrump india trade agreementindia america trade agreementindia us tradeindia us trade newsindia us trade dealindia us trade deal 2026US india trade agreementIndia-US trade agreement.india us trade deal agreement
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

Next Post

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு – காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சீக்கியர்கள், பாஜகவினர் போராட்டம்!

Related News

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies