தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன்,
நீட் எப்படி மாநில உரிமைகளை பறிக்கிறது என எனக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் படிக்க நுழைவு தேர்வு எழுத வேண்டி இருக்கிறது. ஒருவர் என்ன படித்திருக்கிறார் என தெரிந்துகொள்ள வேண்டி தான் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
த வெ க தலைவர் நடிகர் தமிழக அரசு கொண்டுன்வந்த தீர்மானத்தை ஆதரிப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்… நீட் தேர்வு வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றவர் நளினி சிதம்பரம்.
ஒன்றிய அரசு என்ற வார்த்தையை அவர் புதியதாக பயன்படுத்துகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மத்திய அரசு, பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஒன்றிய அரசா?
NCRT பாடத்திட்டம் இந்தியா முழுவதும் உள்ளது. உலக அளவில் என்னென்ன பாடத்திட்டம் இருக்கிறதோ அதனை உணர்ந்து மாற்றங்களை கொண்டு வருவது தான் அதன் வேலை. கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் தான். தமிழ்நாட்டில் உள்ள பாடதிட்டமும், NCRT பாடத்திட்டமும் 99 சதவிகிதம் ஒன்று தான்.
மாணவர்களிடையே குழப்பம் இல்லை, எதிர்கட்சிகளிடம் தான் குழப்பமே. 1.5. லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 88,000 பேர் தேர்வு, 33,000 பேர் தமிழ் வழி கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக பேச எல்லோருக்கும் உரிமை உள்ளது போல விஜய்க்கும் உரிமை இருக்கிறது.
அவர் சொன்னது போல தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்பட்ட, பிற்பட்ட, பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீட் வருவதற்கு முன்பாக எப்படி இருந்தார்கள், நீட் தேர்வுக்கு பிறகாக எப்படி இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரத்தை அவர் கவனித்து பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.