தமிழகத்தில் கொலை கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அறநிலையத்துறை 2000 கோவில்கள் சிதிலமடைந்துள்ளதாக கூறுவது ஏற்புடையது அல்ல. அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் வருமானம் நிறைந்த கோயில்கள் உள்ளன. எப்படி 2000 கோயில்கள் சிதிலமடையும் எனவும் பாடலை சுவர் திருக்கோவிலில் பசுக்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்தும் அதை பயன்படுத்தவில்லை எனவும் கூறினார்.
இந்த அரசு இந்து கோயில்களை கொள்ளை அடிக்கும் அரசாக உள்ளது. பாடலீஸ்வரர் கோவிலின் பசுக்களை அதற்குரிய மூன்று ஏக்கர் இடத்தில் பராமரிக்க வேண்டும் எனவும் கூறினார்.
அவ்வாறு செய்யாவிட்டால் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனும் எச்சரிக்கை விடுத்த அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிறைந்த மாநிலமாக திகழ்கிறது.
விஷ சாராயம் கஞ்சா கொலை கொள்ளை என தமிழகத்தில் தொடர்ந்து வருவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையாவது உளவு பிரிவுக்கு முன்பே தெரியும் என்று கூறப்படுகிறது, அப்படி இருந்தும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கூறினார்.
சீர்கேடு நிறைந்த தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் போய் விசிக தலைவர் திருமாவளவன் அமர்ந்திருக்கிறார் என குற்றம் சாட்டினார்.
திமுக அதிமுகவுக்கு நிகராக பிஜேபி உள்ளது என்பது பிஜேபியின் வாக்கு சதவீதம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2026 இல் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து போட்டியிடுவதாகவும் கூறினார்.
மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் திமுக அரசு தனது கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக அரசு அதிகாரிகளை பழிவாங்குவதாக குற்றம் சாட்டினார்