6 ஆண்டுகள் பிறகு சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிகள் ஜூலை 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பாக தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி முகாம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் என்.ஜி.ஓ.,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் பங்கேற்று பயிற்சிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் இராதாகிருஷ்ணன்,
தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி, world veterinary service சார்பில் இன்று பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 10ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கடைசியாக சென்னையில் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் நாய்கள் ஆணா, பெண்ணா, தடுப்பூசி போட்டுள்ளதா உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்படும் என தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பு பணிகளில் கால்நடை மருத்துவர்கள் மட்டும் இன்றி மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இ்ந்த பயிற்சியில் பங்கேற்றனர்.
உலக அளவில் நகர்ப்புறங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மும்பையில் கூட அதிக மழை பெய்தது. சென்னையை பொறுத்த வரை ஜூன் மாதம் முதல் சோழிங்கநல்லூரில் ஒரே நாளில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடசென்னையில் 9 சென்டிமீட்டர் ஒரே நாளில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் சுரங்க பாதையில் பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு உள்ளிட்ட 4 வழிகளில் மழை நீர் வெளியேறற்றி வருகிறது. உடனுக்குடன் தேங்கும் மழை தண்ணீரை சரி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான கழிவுநீர் அகற்றும் பணி குடிநீர் கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பல சாலைகளில் தண்ணீர் பிரச்சனை சவால்கள் உள்ளது.
இரவு நேர பணிகளும் இதற்காக நடைபெற்று வருகின்றன. மழைக்காலங்களில் பொது சுகாதார பிரச்சனைகள் தண்ணீர், உணவு , பூச்சிகள், கொசு போன்றவைகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது தேவைப்பட்டால் அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படும். மழை காலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கவனமாகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார்.
10 ஆயிரத்து 100 நாய்கள் பிடித்து அதில் 7,165 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டதுள்ளது. 7 முதல் 8 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது
சாலையில் சுற்றித்திரிந்த 1150 மாடுகள் பிடிபடப்பட்டுள்ளது. அவற்றை படப்பை உள்ளிட்ட பெட் வளர்ப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என்பது மாநகராட்சி தரப்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
மூளையை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது, ஒரு சுகாதார பிரச்சனை அல்லாமல் நோய் பிரச்சனை இது அனைத்து நோய்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீச்சல் குளத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் என தெரிவித்தார். எப்போதும் மழைக்காலங்களில் கொதிக்க வைத்து நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து கை கழுவ வேண்டும் கொரோனா காலங்களில் மட்டுமான இந்த வழிமுறை கிடையாது. எல்லா நாட்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
100 இல் 5 நாய்கள் அதிகம் வெறி தன்மை கொண்டதாக உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நாய்களைப் பிடித்தாலும் மீண்டும் அதே இடத்தில் விடுவிக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளது எனத் தெரிவித்தார்.