வுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக, சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருணை தமிழக அரசு இன்று நியமித்தது.
இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் இன்று பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்,
சென்னை மாநகரம் எனக்கும் ஒன்றும் புதிதல்ல, இங்கு எல்லா நிலையிலும் நான் பணிபுரிந்துள்ளேன். முக்கியமாக ரவுடிகளை அடக்குவது உள்ளிட்ட எல்லா நிலைகளிலும் பணிபுரிந்துள்ளேன். அதே போல காவல்துறையில் உள்ள முறைகேடுகளையும் களையெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தற்போது தான் சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன். ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் அவர் உயிருக்கு பாதிப்பு உள்ளது என காவல்துறைக்கு தெரியுமா தெரியாதா என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் குறித்து இப்போது கருத்து கூற விரும்பவில்லை.
காவல்துறை அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் அவருடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே இங்கே குற்றங்கள் குறையும், அதேபோல போதைப்பொருள் விவகாரத்திலும் காவல்துறையில் தங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை சீராக்க வேண்டும், குற்றங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் நடந்த குற்றங்களின் பின்னணியை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தார். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். தனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.