மேற்கு வங்க மாநிலம் மாணிக்தாலா தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
மாணிக்தாலா தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதன் பாண்டே அண்மையில் காலமானார்.
இதைத்தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு வரும் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணி நடைபெற்றது.
இந்தத் தொகுதியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் சதன் பாண்டே மனைவி சுப்தி பாண்டே போட்டியிடுகிறார்.