தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தங்க பிஸ்கட் என கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரிவலம் வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த பெண்ணிடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரவணலட்சுமி, சீனு ஆகியோர் தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலத்தை கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.