பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது வாய் திறப்பார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி, சென்னையில் அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 8 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை சரணடைந்த திருவேங்கடம் தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாக தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திமுக முன்னாள் அமைச்சர் நாசருடன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியுள்ளவர்கள் படங்களை பகிந்துள்ளார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியுள்ள திமுக நிர்வாகிகள் அருள், கலை, மா ஶ்ரீனிவாசன் மற்றும் சதீஷ் ஆகியோர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக, முதல்வர் எப்போது வாய் திறப்பார் என கேள்வி எழுப்பியுள்ளார்.