ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் குண்டா கிராமத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
ராணுவத்தின் பதிலடியால் தாக்கு பிடிக்க முடியாமல் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அங்கு நடைபெற இருந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.