பட்ஜெட்டை மக்களின் பார்வையில் அணுக வேண்டுமே தவிர, அரசியல் பார்வையில் அல்ல என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, ஆர்ப்பாட்டம் நடத்துவது எதிர்க்கட்சியினரின் கடமை என்றால், அவர்கள் அதை முன்னெடுக்கட்டும் என்று தெரிவித்தார்.
இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பட்ஜெட் என்று கூறிய அவர், நடுத்தர வர்க்கத்தினரை அரவணைத்துச் செல்வதுதான் இப்போதைய தேவை என்றும் தெரிவித்தார்.
மேலும் பட்ஜெட்டின் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கவும், வேலை தேடுபவர்களுக்கும் உத்வேகம் கிடைத்திருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குறிப்பிட்டார்.
அத்துடன் பட்ஜெட்டை எதிர்க்கட்சியினர் அரசியல் பார்வையில் இல்லாமல், பொதுமக்களின் பார்வையில் அணுக வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.