மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
அணையின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 62 ஆயிரத்து 870 கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118.84 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 91.63 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.