ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில், ஜார்க்கண்ட் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 2 பேர் பலியாகினர்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில், ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
10-ற்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதில், 2 பயணிகள் பலியாகினர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எஞ்சிய பயணிகள், பேருந்து மூலமாகவும், மாற்று ரயில் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே தடம் புரண்ட சரக்கு ரயில் மீது பயணிகள் ரயல் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்து தொடர்பான தகவல்களைப் பெற, இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.