ஈரோடு மாவட்டம், அஞ்சனை பிரிவு பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த யானையை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
இப்பகுதியில் அரசு சார்பில் யானைகள் நடமாட்டம் குறித்துவிழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே நின்று கொண்டிருந்த காட்டு யானை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை பார்த்து உற்சாகத்துடன் துதிக்கையை உயர்த்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.