இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கும் திமுக அரசு! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Oct 2, 2025, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கும் திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Aug 1, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழக மக்களுக்குப் பொங்கல் தொகுப்பில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை சரக விசைத்தறி கூட்டுறவுச் சங்க நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பல லட்சம் பேர் ஆண்டு தோறும் பயனடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் முதல் வாரத்தில், தமிழக அரசின் சார்பில் நூல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டு, விசைத்தறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, இந்த வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கும் வழங்கப்படும்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் மற்றும் உற்பத்தியாளர்களிடம் கமிஷன் என முறைகேடுகள் பெருக ஆரம்பித்ததோடு, நூல் கொள்முதலில் காரணமில்லாத காலதாமதமும் ஏற்படத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய கொள்முதல் பணிகள், அக்டோபர் மாதம் வரை தள்ளிப் போனதும், இதனால், பொதுமக்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலை, பிப்ரவரி மாதம் வரை தள்ளிப் போனதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக, இந்த திட்டத்தில், கைத்தறித் துறை அமைச்சர் திரு. காந்தி செய்த ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில், தமிழக பாஜக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோக, இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களிடம், 10% கமிஷன் வாங்குவதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

விசைத்தறியாளர்களுக்கு நூல் வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்தி, அதன் பின்னர், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தனியாரிடம் வேட்டி, சேலை அதிக விலைக்குக் கொள்முதல் செய்து அதிலும் கமிஷன் பெறுவதற்காக மட்டுமே, திமுக தொடர்ந்து இந்தப் போக்கை மேற்கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திமுக நூல் கொள்முதல் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார்கள்.

கடந்த ஆண்டே, இலவச வேட்டி சேலை நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, வெகு தாமதமாக, ஜூலை 13, 2023 அன்றுதான் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டோ, நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, இதுவரை வெளியிடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது.

விசைத்தறியாளர்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், தற்போது திமுக ஆட்சியில், திமுகவினர் ஊழல் செய்வதற்காகவும், கமிஷன் வாங்குவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.

உடனடியாக, இலவச வேட்டி சேலைக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப் பணிகளைத் தொடங்கி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் ஊழல் செய்வதற்காகவும், கமிஷன் வாங்குவதற்காகவும், விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று அண்ணாமலை  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: annamalai speechk annamalai latestannamalai latest speechk annamalai india today interviewk annamalai speechk annamalai at india today conclavek annamalai india todayThe DMK government will stop the free Vetti saree scheme! - Annamalai allegationannamalai newsk annamalai vs dmkbjp k annamalaik annamalai times nowk Annamalai Bjpk annamalai interviewbjp annamalaik annamalai newsannamalaik annamalai news todayk annamalaik annamalai latest interviewannamalai bjpk annamalai latest speech
ShareTweetSendShare
Previous Post

இன்ஃபோசிஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்!

Next Post

இந்தியாவின் ராஜதந்திரம்! – சீனாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமா?

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies