காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக திமுக அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் திமுக அரசு அமைதி காப்பது சந்தேகமாக உள்ளதாகவும்,அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசிடம் பணம் வாங்கிவிட்டாரா என இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மழை வந்ததால் காவிரி பிரச்சனை குறித்து இனி பேச மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறும் பதிலைக் கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
போலீஸ் மீதான அச்சம் போய் விட்டதால், நாள்தோறும் 15 கொலை நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கு, போலீசாரின் கைகள் கட்டப்பட்டதே காரணம்.
காவல் நிலையத்தில் போலீசார் வேலை செய்வதில்லை. அதிக கொலை நடப்பது தான் எங்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது தெளிவாகி உள்ளது. கொலை தொடர்பாக கேள்வி எழுப்பினால், அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார.
அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாஜக சார்பில் ஆக.20 முதல் தொடர் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.