வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை துறந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஷேக் ஹசீனா பதவி விலக கோரி இளைஞர்கள் போர்க்கொடி தூக்கியதால், அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, நோபல் பரிசுபெற்ற யூனஸ், இடைக்கால அரசை வழிநடத்த வேண்டுமென போராட்டக்காரர்கள் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டு, அரசின் ஆலோசகராக செயல்பட சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.