தமிழகம் முழுவதும் 56 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்.பி சக்தி கணேசன், சென்னைப் பெருநகர உளவுத்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை தென் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி சுஜித் குமார், பெருநகர சென்னை காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி செல்வநாகரத்தினம் திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் கடலோர காவல் படையின் எஸ்பி டி.என்.ஹரிகிரண் பிரசாத் மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் தூத்துக்குடி, கோவை, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட 56 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.