திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து திருச்சியில் திருவானைக்காவல், உறையூர், மன்னார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்தது.
இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேல் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் நகர்ந்து சென்றன. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியது