கத்தாரிலிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 466 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கத்தாரின் தோஹாவிலிருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவரின் காலணியின் அடிப்பகுதிக்குள் மறைத்து சுமார் 466 கிராம் எடையுள்ள 8 தங்க செயின்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.