கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தன்னார்வலர் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே நான்கு முறை திருமணமானதும், அவரது நடத்தையால் மூன்று மனைவிகள் அவரை விட்டு பிரிந்து சென்றதும், நான்காவது மனைவி புற்றுநோயால் கடந்த ஆண்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.