புதுக்கோட்டை அருகே தங்கை மகன் காதணி விழாவுக்காக தாய்மாமன் காளை, ஆடு, கோழி என பிரம்மாண்ட சீர்வரிசையை வழங்கியுள்ளார்.
பரவட்டிவயல் கிராமத்தை சேர்ந்த விஜயராஜன் என்பவர் தனது தங்கை மகன்கள் 4 பேருக்கு காதணி விழா நடத்தினார்.
அப்போது தாய்மாமன் சார்பில் ஜல்லிக்கட்டு காளை, வான்கோழி,உள்ளிட்ட 200 வகை சீர் வரிசை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.