வங்கதேச அரசின் ஆலோசகரும், இடைக்கால அரசின் தலைவருமான முகமது யூனுஸ், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்த பிரதமர் மோடி, அந்நாட்டில் நிலவும் சூழல் குறித்து இருவரும் பரஸ்பரம் கருத்து பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயக, நிலையான, அமைதியான வழியில் வங்கதேசம் முன்னேற இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதியளித்ததாக அந்தப் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முகமது யூனுஸ் உறுதியளித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.