அமெரிக்காவில் உள்ள காலநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 6.7 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளன.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 9.8 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது. காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, எரிசக்தி துறையில் அரசு பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
எனினும், காலநிலை தொழில்நுட்பத்தை விட செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதால், காலநிலை தொழில்நுட்பத்திற்கான முதலீடு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
காலநிலை தொழில்நுட்பத்திற்கான முதலீட்டில் அமெரிக்கா சீனாவை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.