தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனத்திற்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
எந்தவித வரைமுறையும் இன்றி ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தேர்வாணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
“அரசுத்துறைகளில் ஆலோசகர்களை நியமிப்பது 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு எதிரானது” என்றும் தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.