உக்ரைன் மற்றும் போலந்துக்கு வரலாற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது, உக்ரைன் நிலைமை குறித்து விவாதித்த பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
உக்ரைனில் அமைதியை கொண்டுவர வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்தார். மேலும், வங்கதேசத்தின் நிலைமை மற்றும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.