டெல்லியில் பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.
கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை பினராயி விஜயன் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது பாதிப்பு விவரம் தொடர்பான விரிவான மனுவை பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்து, தகுந்த நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.