கேரளாவில் செயல்படும் “AMMA” நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான நடிகர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து, நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், 15 பேர் பிடியில் மலையாள சினிமா சிக்கியிருப்பதாகவும், பெண் தொழிலாளா்கள் மீது பாலியல் சீண்டல் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாலியல் புகார்கள் தொடர்பாக ஆலோசிக்க “AMMA” நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் கொச்சியில் நடைபெற இருந்த நிலையில், சங்க நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்திருப்பதுடன், தொடர் பாலியல் புகார்களால் ”AMMA” சங்கத்தின் செயற்குழு முழுமையாக கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.