மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, கிரண் செளத்ரி ஆகிய இருவரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
ஹரியானாவிலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட கிரண் செளத்ரி, போட்டியின்றி ஒருமனதாக தேர்வான நிலையில், சண்டீகரில் அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார்.
அப்போது ஹரியானா முதல்வர் நயப் சிங் சைனி, மாநில பாஜக தலைவர் மோகன் லால் படோலி மற்றும் சட்டப் பேரவைத் தலைவர் கியான் சந்த் குப்தா ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல, ராஜஸ்தானிலிருந்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, மாநிலங்களவைக்கு போட்டியின்றி ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.