இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதனால் தங்கம் விலை சற்று குறைந்தாலும் மீண்டும் உயர்ந்து வருகிறது.
போர் பதற்றம் மற்றும் சீனாவின் மத்திய வங்கி தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது 55 ஆயிரத்தை தாண்டியுள்ள ஒரு சவரன் தங்கம் விரைவில் 64 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாகவும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.