கொடைக்கானலில் குடியிருப்புப் பகுதியில் இரண்டு காட்டெருமைகள் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனம் சேதமடைந்தது.
கொடைக்கானலில் சர்வ சாதாரணமாக நகர் பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடி வருகின்றன. இந்நிலையில் எம்.எம்.தெரு குடியிருப்பு பகுதிக்கு வந்த இரண்டு காட்டெருமைகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டன.
அப்போது காட்டெருமைகள் மோதியதில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகன சேதமடைந்தது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் வனவிலங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.