சென்னை ஜாபர்கான்பேட்டையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெருவில் மஞ்சன் என்பவர் மது போதையில் தெருவில் படுத்துக் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நடிகை ரேகா நாயரின் கார், மஞ்சன் மீது ஏறி இறங்கியது.
இதில் படுகாயமடைந்த மஞ்சன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் பாண்டியனை கைது செய்தனர்.