கர்நாடக மாநிலம் உடுப்பியில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதை கண்டித்து இளைஞர்கள் வித்தியாசமாக வேடமணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதி உடுப்பி – மால்பே சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் சாலையை சீரமைத்து தரக்கோரி இளைஞர்கள் எமன், சித்ரகுப்தன், பேய்கள் ஆகிய வேடமணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.