கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து தேசிய கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடும் முதியவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாணவர் சங்கத்தினர் சார்பில் நபன்னா அபிஜன் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பேரணிக்காக கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து காவல்துறையினர் கலைத்தனர். அப்போது தேசியக் கொடியை ஏந்தியபடி சற்றும் அசையாமல் முதியவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.