காங்கிரஸ் இயக்கம் பொய்யான தகவல்களை வெளியிட்டு தேசத்தை தவறாக வழிநடத்த வேண்டாம் என மத்திர ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் சிறிய ரயில் விபத்து நடைபெற்றதாக பதிவிடப்பட்டிருந்தது.
இந்த விபத்தில் ரயில் ஓட்டுநரும், சில பயணிகளும் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சகம், காங்கிரஸ் தேசத்தை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும், புகைப்படத்தில் உள்ள ரயிலோ, ஓட்டுனரோ இந்திய ரயில்வே-யை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், ரயில்வே குடும்பத்தை அவமதிப்பதை நிறுத்துங்கள் எனவும் காங்கிரஸ் கட்சிக்குமத்திய ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
















