சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை தி.மு.க எம்.பி., ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். இதனை மனைவி, மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார்.
இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, விளக்கம் கேட்டு ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், அவருக்கு சொந்தமான 89 புள்ளி 19 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டது. அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கான உத்தரவு கடந்த 26ம் தேதி பிறப்பிக்கப்பட்டது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.