முதலமைச்சரின் துபாய் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் 50 சதவீதம் செயல்பாட்டிற்கு வரவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.
துபாய் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 3 செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 631 ஒப்பந்தங்களில் 248 மட்டுமே செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும், உருவான வேலைவாய்ப்புகள் எத்தனை என்பது குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.