வரும் 31ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மாதத்தின் இறுதிப்பணி நாளில் ரேசனில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
ஆனால், ஆகஸ்டு மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்களுக்கும் தடையின்றி பொருட்கள் கிடைக்கும் நோக்கில் வரும் 31-ம் தேதியன்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.