பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தும் நிர்பயா சட்டத்தை, தமிழகத்தில் திமுக அரசு பயன்படுத்தவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி NIT பெண்கள் விடுதியில், மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
புகார் தெரிவிக்க சென்ற மாணவியை காவல் நிலையத்தில் இழிவாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் கழிப்பறை பகுதியில் மாணவி ஒருவருக்கு வடமாநிலத் தொழிலாளியால் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டது v என்பதை இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது எனவும், குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க திமுக அரசு திராணி இன்றி உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இனி வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் கடும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.