மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வாதவன் துறைமுகத் திட்டத்துக்கும், 1,560 கோடி ரூபாயில் பல்வேறு மீன்வளத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மால்வானில் அண்மையில் சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து சேதம் அடைந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜி மகாராஜா தங்களைப் பொறுத்தவரை வெறும் பெயர் மட்டுமல்ல, அவர் ஒரு தெய்வம் என கூறினார்.
வாதவன் துறைமுகம் சரக்குகளைக் கையாளக்கூடிய மிகப்பெரிய துறைமுகமாக மாறும் என்றும், இதன்மூலம் இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.