தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, முருகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆவணி திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் 7-வது நாளான இன்று முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.