கசந்த அமெரிக்க வாழ்க்கை! : பிரிட்டனுக்கு திரும்பும் இளவரசர் ஹாரி!
Sep 9, 2025, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கசந்த அமெரிக்க வாழ்க்கை! : பிரிட்டனுக்கு திரும்பும் இளவரசர் ஹாரி!

Web Desk by Web Desk
Sep 4, 2024, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க பிரிட்டன் இளவரசர் ஹாரி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பழைய நண்பர்கள் மற்றும் முன்னாள் ஆலோசகர்களின் மூலம் இது நடக்கலாம் என்று இளவரசர் ஹாரி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் ஹாரியும், கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல்வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருக்கும், ஹாரி- மேகன் தம்பதியருக்கும் இடையே அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன.

2020ம் ஆண்டு தொடக்கத்தில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் ஆகியோர் அறிவித்தனர். பிறகு அமெரிக்காவில் குடியேறி விட்டனர்.

அரச குடும்பத்தினரின் தொடர் பேச்சுவார்தைகளுக்குப் பின் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர்களுக்கான அனைத்து பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹாரி தனது பிரிட்டிஷ் வசிப்பிடத்தைத் துறந்து, அமெரிக்காவை தனது அதிகாரபூர்வமான இடமாக அறிவித்திருந்த நிலையில்,கடந்த ஆண்டு, இளவரசர் ஹாரியும், மேகனும் பிரிட்டனில் உள்ள அதிகாரப்பூர்வ ஃபிராக்மோர் அரண்மனையை காலி செய்தனர்.

கடந்த ஜூலை மாதம் ஹாரிக்கும், மேகன் மார்க்கலுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியதாக செய்திகள் வெளிவந்தன. இதனை உறுதி செய்யும் வகையில், திட்டமிட்டபடி தனது வாழ்க்கை அமையவில்லை என்ற மேகன் கருதுவதாகவும், அதனால் ஹாரிக்கும் மேகனுக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க பிளவு ஏற்பட்டு விட்டதாகவும் ராயல் எழுத்தாளர் டாம் க்வின் தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் ஹாலிவுட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேகனின் புகழ் திருமணத்துக்குப் பின் சரிவைக் கண்டதும் Netflix உடனான ஹாரி- மேகன் ஒப்பந்தம் சிக்கலில் முடிந்ததும், பெரும் மனஅழுத்தத்தை இருவருக்கும் ஏற்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், மேகன் முன்னெடுத்த வணிக முயற்சியான லைஃப்ஸ்டைல் ​​பிராண்டான அமெரிக்கன் ரிவியரா ஆர்ச்சர்ட் சந்தையில் வெற்றி பெறமுடியாமல் திணறியது.

இந்நிலையில், இளவரசர் ஹாரி தனது சொந்த நாடான பிரிட்டனையும், சொந்த உறவுகளையும் பிரிந்து தனிமைப்படுத்தப் பட்டு விட்டதாக உணரத் தொடங்கி இருப்பதாகவும், அவரது மனைவி மேகன் மார்க்கெலை ஹாரியின் நண்பர்கள் விரும்பாததால், அவர்களும் ஹாரியிடம் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இளவரசர் ஹாரியை காண அவரது நண்பர்கள் வருகை தராத காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார் என்று அரச குடும்பத்திற்கு நெருக்கமான டாம் க்வின் தெரிவித்திருக்கிறார். மேலும் இளவரசர் ஹாரி , அமெரிக்காவில் தனது வாழ்க்கை குறித்த நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக வருத்தப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இளவரசர் ஹாரி மிகவும் மகிழ்ச்சியற்றவராகத் இருப்பதாகவும் , ஹாரி தனது மனைவியால் ஓரங்கட்டப்படுவதாகவும், மோசமாக நடத்தப்படுவதாகவும் ராயல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஏஞ்சலா லெவின் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டனில் வசிக்க இடமில்லாமல் போனதால், ஹாரி இங்கிலாந்தில் புதிய இடத்தைத் தேடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஹாரி தனது சொந்த நாட்டில் உள்ள சொத்துக்களை பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முன்னாள் சமையல்காரர், கிராண்ட் ஹரோல்ட் கூறியிருக்கிறார்.

இந்த நடவடிக்கை ஹாரி தனது தந்தையுடனான உறவை சரிசெய்து, அரச குடும்பத்தில் மீண்டும் சேரலாம் என்ற நம்பிக்கையில், இங்கிலாந்தில் அதிக நேரம் செலவிடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிய வருகிறது.

இளவரசர் ஹாரி, அரச குடும்பத்தில் உருவாக்கிய காயங்களைக் குணப்படுத்த அவருக்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்று அரச குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tags: Bitter American Life! : Prince Harry returns to Britain!
ShareTweetSendShare
Previous Post

அண்ணாபல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு புரளி: மர்ம நபர் குறித்து விசாரணை!

Next Post

வெப்தொடரில் பயங்கரவாதிகளின் உண்மை பெயர்கள் வெளியிடப்படும்! – நெட்பிளிக்ஸ்

Related News

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies