IC-814 என்ற வெப் தொடரில் பயங்கரவாதிகளின் உண்மை பெயர்களை வெளியிடப்போவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்று விமானக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை சம்பவம் IC-814, The Kandahar Hijack என்ற பெயரில் வெப் தொடராக படமாக்கப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹிந்துக்களின் பெயர்களை வைத்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நெட்பிளிக்ஸின் இந்தியப் பிரிவு உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை நோட்டீஸ் பிறப்பித்தது.
இதையடுத்து தொடரின் ஆரம்பத்திலேயே பயங்கரவாதிகளின் உண்மை பெயர்கள் பொறுப்பு துறப்பாக வெளியிடப்படும் என நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.