அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த தர்ஷினி வாசுதேவன் உள்ளிட்டோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து பெண்டான்வில்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியது. மேலும், அந்த கார் மீது பின்னால் வந்த 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
கார்பூ லிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்றபோது விபத்தில் சிக்கி 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர்.