விநாயகர் சதுர்த்தியையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நமது பாரம்பரியத்தில் விநாயகர் ஐஸ்வரியங்களை அளிப்பவராகவும், தடைகளை நீக்குபவராகவும் கருதப்படுகிறார் என்றும், இந்த புனிதமான தருணத்தில், அனைவரையும் பேரிடரிலிருந்து பாதுகாத்து செழிப்பை பரப்ப இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
















